எனக்கொரு சினேகிதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

Enakoru Snegidhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

ஆண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் மெல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் செல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…

—BGM—

ஆண் : மேகமது சேராது…
வான் மழையும் வாராது…
தனிமையில் தவித்தேனே…
உன்னை எண்ணி இளைத்தேனே…

பெண் : மேல் இமையும் வாராது…
கீழ் இமையும் சேராது…
உனக்கிது புரியாதா…
இலக்கணம் தெரியாதா…

ஆண் : சம்மதங்கள் உள்ள போதும்…
வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்…

பெண் : வார்த்தை வந்து சேரும் போது…
நாணம் என்னை கட்டிப்போடும்…

ஆண் : மௌனம் ஒன்று போதும் போதுமே…
கண்கள் பேசிவிடுமே…

—BGM—

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

—BGM—

பெண் : கைவளையல் குலுங்காமல்…
கால் கொலுசும் சிணுங்காமல்…
அணைப்பது சுகமாகும்…
அது ஒரு தவமாகும்…

ஆண் : மோகம் ஒரு பூப்போல…
தீண்டியதும் தீப்போல…
கனவுகள் ஒருகோடி…
நீ கொடு என் தோழி…

பெண் : உன்னைத்தந்து என்னை நீயும்…
வாங்கி கொண்டு நாட்களாச்சு…

ஆண் : உன்னை தொட்ட பின்புதானே…
முட்கள் கூட பூக்களாச்சு…

பெண் : விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால்…
விறகும் வீணையாகும்…

—BGM—

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் செல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…

—BGM—


Notes : Enakoru Snegidhi Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. எனக்கொரு சினேகிதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading