ஊதுற சங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. பாக்யராஜ்கே. பாக்யராஜ்தென்பாண்டி சீமையிலே

Oodhura Sangha Song Lyrics in Tamil


ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

—BGM—

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

—BGM—

ஆண் : கொட்டினாத்தான் தேள ஊரு மதிக்கும்…
இல்ல புள்ளப் பூச்சியின்னு போட்டு மிதிக்கும்…

—BGM—

ஆண் : குட்ட குட்ட குனிஞ்சா என்ன நடக்கும்…
கொஞ்சம் தட்டிக் கேளு அப்போ நீதி கிடைக்கும்…

ஆண் : சூடு ஒண்ணு போட்டு வச்சா…
மாட்டுக்கொரு சொரணை வரும்…
சொல்லு ஒண்ணு சொல்லிப்புட்டா…
யாருக்குமே ரோஷம் வரும்…
பொல்லாப்ப விட்டுப்புட்டு எல்லாரும் ஒண்ணுப்பட்டு…
புரட்சி பாதையில் எழுச்சி காணவே…

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

—BGM—

ஆண் : ஏணியைப் போல ஊர ஏத்திவிடணும்…
ஆனா எட்டி உதைப்பவன முட்டித் தட்டணும்…

—BGM—

ஆண் : தோணியைப் போல் பலரை சுமந்திடனும்…
ஆனா கவுக்க நெனைப்பவன ஆத்தில் விடணும்…

ஆண் : நல்லவங்க பேரை தினம்…
ஊருக்குள்ள நாம் சொல்லலாம்…
ஆனா நல்ல நல்ல காரியத்த…
நாம கூட செஞ்சுக் காட்டணும்…
வீண் வம்பு பேசிக்கிட்டு…
வெறும் வாய மென்னுக்கிட்டு…
கோஷம் போடுறவன் வேஷம் கலையவே…

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

—BGM—

ஆண் : நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…


Notes : Oodhura Sangha Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஊதுற சங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading