ஓலை ஓலை குடிசையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமுருகவேல் & கார்த்திகா வைத்தியநாதன்சீன் ரோல்டன்ஜோக்கர்

Ola Ola Kudisayila Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓலை ஓலை குடிசையில…
ஒண்ட வந்த சீமாட்டி…
உன்ன நான் வச்சிக்குவேன்…
உசுருக்குள்ள தாலாட்டி…

பெண் : ஆறே காஞ்ச போதும்…
அன்புல நீ நீராடு…
சோறே இல்லனாலும்…
சொந்தம் இருக்கும் உன்னோடு…

பெண் : வா சீக்கிரம் பூவோடத்தான்…
ஆண் : நா இப்பவே உன் கூடதான்…

பெண் : வா சீக்கிரம் பூவோடத்தான்…
ஆண் : நா இப்பவே உன் கூடதான்…

—BGM—

ஆண் : வாசலில கோலமிட ஆசப்பட வேணாமே…
வாசலே இல்லா வீட்டில் பூசணிப் பூ நீதானே…

பெண் : வைரத்துல தோடு செஞ்சு…
போட்டுக்கொள்ள வேணாமே…
வைரமா நீயும் சேர…
நகையும் நட்டும் பொய்தானே…

ஆண் : வேர்வையில நூலெடுத்து…
சேலை நெஞ்சு நா தருவேன்…
வெக்கப்பட்டு நீ சிரிச்சா கட்டிக்குவேன்…

ஆண் : கூடி கலைஞ்ச பிறகும்…
என் பாசம் ஊறுதே…

பெண் : ஏறு வெயிலப் போல…
சந்தோஷம் கூடுதே…

ஆண் : ஓலை ஓலை குடிசையில…
உன்ன நா வச்சிக்குவேன்…

—BGM—

ஆண் : மாசம் சில போனதுமே…
மாணிக்கமா ரெட்ட புள்ள…
ஒன்னா நீ பெத்துத் தந்தா…
மருத்துவச்சி பில்லு மிச்சம்…

பெண் : பெத்தெடுத்த பிள்ளைகள…
ரத்தினம் போல் ஆக்கனுமே…
இங்கிலீசும் படிக்க வச்சு…
ஏரோப் பிளேனில் ஏத்தனுமே…

ஆண் : துணையா சேந்திருந்தா நள்ளிரவு வெள்ளிவரும்…
தும்மலிடும் சத்தத்துக்கே சாமிவரும்…

ஆண் : வாழ வேணும் நாம…
மழைக்காத்து பூமியா…

பெண் : ஆசை தீர வாழ்ந்தா…
மறு சென்மம் தேவையா…

ஆண் : ஓலை ஓலை குடிசையில…
ஒண்ட வந்த சீமாட்டி…
உன்ன நான் வச்சிக்குவேன்…
உசுருக்குள்ள தாலாட்டி…

பெண் : ஆறே காஞ்ச போதும்…
அன்புல நீ நீராடு சோறே…
இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு…

பெண் : வா சீக்கிரம் பூவோடத்தான்…
ஆண் : நா இப்பவே உன் கூட தான்…

பெண் : வா சீக்கிரம் பூவோடத்தான்…
ஆண் : நா இப்பவே உன் கூட தான்…

—BGM—


Notes : Ola Ola Kudisayila Song Lyrics in Tamil. This Song from Joker (2016). Song Lyrics penned by Yugabharathi. ஓலை ஓலை குடிசையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading