ஓல குடிசையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆனந்த்

Ola Kudisaiyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

—BGM—

ஆண் : பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது…
நல்லதொரு நாள்தானே…
கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது…
காலம் இனி தேன்தானே…

ஆண் : மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…
மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…

ஆண் : பொண்டாட்டி ஆனாதான்…
கொண்டாட்டம் கும்மாளம்…
இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

குழு : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடு…

ஆண் : பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா…
ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா…

ஆண் : நடைய கட்டணும் பத்தாது…
குழு : நடைய கட்டணும் பத்தாது…
ஆண் : மேளத்த கொட்டணும் பத்தாது…
குழு : மேளத்த கொட்டணும் பத்தாது…

ஆண் : தாலிக் கட்டினா…
குழு : பத்தாது…
ஆண் : தண்ணி அடிச்சா…
குழு : பத்தாது…

ஆண் : பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க…
பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா…

ஆண் : பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு…
அப்புறமா வெட்டுவ… ஹாஆ…

—BGM—

ஆண் : கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க…
கட்டிலுக்கு மேலாக… ஆங்…
எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க…
கண்ணு வெய்க்க போறாங்க…

ஆண் : பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…
பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…

ஆண் : முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது…
அப்பாவா ஆகபோற… ஹே ஹே யப்பா யப்பா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல குடிசையில…
குழு : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல…
குழு : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…


Notes : Ola Kudisaiyile Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஓல குடிசையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading