அந்தி வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Andhi Varum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்…

—BGM—

பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து…

—BGM—

ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது…
சந்தனத்து உடல் அணைத்து…

பெண் : இதழில் ஒரு ஓலை…
எழுதும் இந்த வேளை…

ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை… ஹான்…

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்…
போராடுது காதலின் வேகம்…
என்றென்றும் ஆனந்த யோகம்…

ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

—BGM—

ஆண் : இன்பத்துக்கு முகவுரை…
என்றுமில்லை முடிவுரை…
நீயிருக்க ஏது குறை…

—BGM—

பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை…
பாட வந்தேன் நூறு முறை…

ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…

பெண் : நினைத்தால் இங்கு யாவும்…
இனிமை என்று கூறும்…

ஆண் : ஆஹாஹ்… இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

ஆண் & பெண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

—BGM—


Notes : Andhi Varum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. அந்தி வரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading