ஓடும் ரயிலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅபய் ஜோத்புர்கர்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Odum Rayilai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…

—BGM—

ஆண் : தேனி உன்னை ஈசல் என்று…
எண்ணி கொண்டு நானிருந்தேன்
தேவதை நீ என்ற உண்மை…
சற்று முன்புதான் அறிந்தேன்…

ஆண் : குட்டை ஒன்று உன்னாலே…
கங்கை ஆனதே…
என்னை மன்னிப்பாயா…
இல்லை தண்டிப்பாயா…

ஆண் : கொஞ்சம் தவறாக உன்னை நினைத்தேனே…
திருநீரை சாம்பல் பறித்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

—BGM—

ஆண் : கண்ணிமைக்கும் நேரத்துக்குள்…
ஏனோ என்னை காணவில்லை…
கை பிடித்து கூட்டி சென்று வானவில்லை…
ஒற்றை பார்வையாலே எல்லாம் மாறுதே…

ஆண் : மக்கு பயலானேன் முக்தி அடைந்தேனே…
தருதலைதானே தலை நிமிர்ந்தேனே…
விலைவாசி போல உயர்ந்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…

—BGM—


Notes : Odum Rayilai Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. ஓடும் ரயிலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading