ஓ சுகுமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்அந்நியன்

O Sukumari Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ சுகுமாரி ஓ சஞ்சாரி…
என் அலங்காரி நீ…
ஓ சுகுமாரி ….
குழு : ஏ லம்பாதானே…

ஆண் : ஓ சுகுமாரி ஓ சிங்காரி…
என் குமாரி நீ…
குழு : என் குமாரி…
ஆண் : என் குமாரி…
குழு : என் குமாரி…

ஆண் : குமாரி…
குழு : குமாரி…

ஆண் : குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது…
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது…
குமாரி என் வார்த்தை கடல் வற்றிவிட்டதே…

ஆண் : நான் தோற்று போவேன் என்று அஞ்சியே…
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்…
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி…
மலருக்குள் அடி தடி…

ஆண் : குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது…
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது…
குமாரி என் வார்த்தை கடல் வற்றிவிட்டதே…

BGM

ஆண் : இந்த காதல் என்ன பெரும் பாரமா…
இது பேறு காலம் இல்லா கற்பமா… ஓஹோ ஓஓ…

ஆண் : காதலை மறைத்தால் கனம் தாங்காமல்…
என்னுயிர் செத்துபோகும் இல்லையா…
காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்…
காதலே செத்து போகும் இல்லையா…

ஆண் : ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை…
முழுசா சொல்வது இல்லை…
நீ கண்கள் அடைத்தால் காதல் நுழைய…
இன்னொரு வாசல் இல்லை…

ஆண் : குமாரி குமாரி… ஆஆஆ… ஆஆஆ…

BGM

ஆண் : நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா…
தினம் தேய்கிறேனே இது தேவையா…

ஆண் : கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி…
கோயிலை தேடி நடக்கின்றேன்…
கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து…
கோரிக்க வைக்க மறக்கின்றேன்…

ஆண் : அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்…
பூமியில் உள்ளான் எவன்…
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும்…
தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்…

ஆண் : குமாரி…

பெண் : குமாரா உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா…
குமாரா உன் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குதா…
குமாரா உன் வார்த்தை கடல் வற்றிவிட்டதா…

ஆண் : நான் தோற்று போவேன் என்று அஞ்சியே…
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்…
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி…
மலருக்குள் அடி தடி…

BGM


Notes : O Sukumari Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Vairamuthu. ஓ சுகுமாரி பாடல் வரிகள்.


Scroll to Top