ஓ நெஞ்சே நெஞ்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாதேவாமுகவரி

O Nenje Nenje Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே…
ரா ரா ரா ரா…
ஓ நெஞ்சே நெஞ்சே…

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே…
ரா ரா ரா ரா…
ஓ நெஞ்சே நெஞ்சே…

ஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்…
உலா போகிறாய்…
நீ நட்சத்திரங்களில் வாழவே…
கனா காண்கிறாய்…

ஆண் : நெஞ்சே நீ விண்ணை…
சுற்றிப் பறந்தாலும்…
உன் காலை மண்ணில் ஊன்றி…
நில் நில் நில் நில்…

பெண் : அன்பே அன்பே…
உன் துக்கத்தை விட்டு…
விண்ணை தொட்டு…
உன் பேரை நிலவில் வெட்டு…

BGM

பெண் : காற்றெல்லாம் இனிக்கும்படி…
கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி…
என் காலம் நடக்கட்டுமே என் தேவா…
உன் மார்பில் சாய்ந்தபடி…

ஆண் : ஒரு பார்வை சிறு வார்த்தை…
எந்தன் உயிருக்கு கவசமடி…
இறந்தாலும் உயிர் ஊட்டும்…
உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி…

பெண் : நான் சொல்லும் சொல்லை கேளாய்…
நாளைக்கு நீயே வெல்வாய்…
சங்கீத நாதங்களுக்கு…
வேதம் சொல்வாய்… வேதம் சொல்வாய்…

ஆண் : பெண்ணே பெண்ணே…
உன் ஒற்றை சொல்லுக்கு…
பொன்னும் முத்தம்…
நான் கொட்டித்தர வேண்டும்…

ஆண் : அன்பே அன்பே…
உன் அன்பு சொல் வேண்டும்…
இன்னும் சொல்லு…
என் ரத்தம் ஊர வேண்டும்…

பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே…
ரா ரா ரா ரா…
ஓ நெஞ்சே நெஞ்சே…

BGM

குழு : காலேஜூ காலேஜூ…
அக்கா எந்தக் காலேஜூ…
அக்டோபர் நவம்பர்…
எந்த மாசம் மேரேஜு…
ஹார்ட் ஓட பீட் எல்லாம்…
லவ் லவ் லவ் லவ்…

BGM

ஆண் : சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் பெண் பூவே…
சங்கீதம் மாற்றி வைப்பேன்…
காலங்கள் கனியும் வரை பேசாமல்…
காற்றுக்கு இசை அமைப்பேன்…

பெண் : கலங்காதே மயங்காதே…
உன் கனவுக்கு துணை இருப்பேன்…
இந்த பூமி உடைந்தாலும்…
உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்…

பெண் : என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன்…
இதயத்தின் ஓசை கேளு…
என் நெஞ்சில் ஒட்டி செல்லும்…
பாட்டு கேட்டு மெட்டு போடு…

ஆண் : பூவே பூவே…
உன் மூச்சே சங்கீதம்…
சத்தம் சிந்தும்…
உன் முத்தம் கூட நாதம்…

ஆண் : வாழ்வின் தீபம்…
அடி நீதான் எப்போதும்…
என்றும் போதும்…
நீ சொல்லும் சொல்லே வேதம்…

பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே…
ரா ரா ரா ரா…
ஓ நெஞ்சே நெஞ்சே…

பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே…
ரா ரா ரா ரா…
ஓ நெஞ்சே நெஞ்சே…

ஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்…
உலா போகிறாய்…
நீ நட்சத்திரங்களில் வாழவே…
கனா காண்கிறாய்…

ஆண் : நெஞ்சே நீ விண்ணை…
சுற்றிப் பறந்தாலும்…
உன் காலை மண்ணில் ஊன்றி…
நில் நில் நில் நில்…

BGM


Notes : O Nenje Nenje Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top