ஹே கீச்சு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாமுகவரி

Hey Keechu Kiliye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே ஹே கீச்சு கிளியே…
என் காதில் தித்தித்தாய்…
இசையாலே எனது புதிய நாளை…
நீ இன்று திறந்தாய்…

—BGM—

ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே…
என் காதில் தித்தித்தாய்…
இசையாலே எனது புதிய நாளை…
நீ இன்று திறந்தாய்…

—BGM—

ஆண் : கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்…
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்…
அதன் உயிர்சதை இசைவது…
என்றும் அந்த நாதத்தில்…

—BGM—

ஆண் : உயிர்களின் சுவாசம் காற்று…
அந்த காற்றின் சுவாசம் கானம்…
உலகே இசையே…

—BGM—

ஆண் : எந்திர வாழ்கையின் இடையே…
நெஞ்சில் ஈரத்தை புசிவது இசையே…
எல்லாம் இசையே…

—BGM—

ஆண் : காதல் வந்தால்…
அட அங்கும் இசைதான்…
கண்ணீர் வந்தால்…
அட அங்கும் இசைதான்…

ஆண் : தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்…
அதை தூங்க வைப்பதும் இந்த இசைதான்…
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து…
கண் விழிப்பதற்கும் இந்த இசைதான்…

ஆண் : இசையோடு வந்தோம்…
இசையோடு வாழ்வோம்…
இசையோடு போவோம்…
இசையாவோம்…

—BGM—

ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே…
என் காதில் தித்தித்தாய்…
இசையாலே எனது புதிய நாளை…
நீ இன்று திறந்தாய்…

—BGM—

ஆண் : இன்னிசை நின்று போனால்…
என் இதயம் நின்று போகும்…
இசையே உயிரே…

—BGM—

ஆண் : எந்தன் தாய்மொழி இசையே…
என் இமைகள் துடிப்பதும் இசையே…
எங்கும் இசையே…

—BGM—

ஆண் : மௌனம் மௌனம்…
என் நெஞ்சை அடைக்கும்…
கீதம் கேட்டால்…
அது மீண்டும் துடிக்கும்…

ஆண் : ஐம்புலன்கள் எந்தன் இருப்பு…
செவி மட்டும்தான் ரொம்ப சிறப்பு…
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு…
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு…

ஆண் : இசையோடு வந்தேன்…
இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்…
இசையாவேன்…

ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே…
என் காதில் தித்தித்தாய்…
இசையாலே எனது புதிய நாளை…
நீ இன்று திறந்தாய்…

ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே…
என் காதில் தித்தித்தாய்…
இசையாலே எனது புதிய நாளை…
நீ இன்று திறந்தாய்…

—BGM—


Notes : Hey Keechu Kiliye Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. ஹே கீச்சு கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading