வீரன் திருவிழா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்முத்து சிற்பி, சின்னபொண்ணு, பிரணவம் சசி & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாவீரன்

Veeran Thiruvizha Song Lyrics in Tamil


ஆண் : கும்பம் விளக்கு வச்சி…
குரு பூச ஆகுதுன்னு…
கரகம் விளக்கி வச்சி…
கன பூச ஆகுதுன்னு…

ஆண் : உனக்கு மாங்கா இளநீர்…
அந்த மனம் புடிக்கும் என்று சொல்லி…
உனக்கு தேங்கா இளநீர்…
தெவுரு அடிக்கும் என்று சொல்லி…

ஆண் : உனக்கு கொம்பால இளநீர்…
கொண்டு வந்தோம் பூசையினு…
இந்த பூச முகம் பாக்க…
அங்க புறப்பட்டு நீ எழும்பு…

BGM

ஆண் : நெய் விளக்கு ஏத்தி வச்சி…
கும்புடுறோம் வீரனே…
நெல்லு மணி எடுத்து வந்தோம்…
எத்துகனும் வீரனே…

ஆண் : நெத்து காய ஓடைச்சு வச்சோம்…
உனக்கென வீரனே…
முக்கனிய பறிச்சு வந்து…
சாமி…
முழுசா படையளித்தோம்…
சாமி…
உனக்கு கட்டு பட்டு…
சாமி…
உசுர கொடுத்து நிப்போம்…
சாமி…
உதிர திலகமிட்டு…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகன்…
அவன் தளபதியாம் வீரன் இவன்…
குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன்…
ஆலமரம் போல நின்று காக்கும் இவன்…

பெண் : ஆஹா… வீரனே… வீரனே…

பெண் : உச்சி முகத்த தலகாட்டி…
ஒசந்து நிற்கும் மாவீரனே…
பஞ்சம் பறந்து பயந்தோடும்…
அவன் பார்வை பட்டா போதும் மகனே…

ஆண் : விழி காத்து மொழி காத்து வழி கொடுப்ப…
இருளான உலகுக்கு ஒளி கொடுப்ப…
சந்தனத்த நீ பூசி முகம் சிரிப்ப
சங்கடத்த தூசியாக்கி நெருப்பெரிப்ப…

ஆண் & பெண் : திக்கு தெசை எங்கும் யமக்காக…
திமிறி நிற்கும் மாவீரனே…
சுத்தி முறைக்கும் படைக்கெதிர…
புரவி எறி நீ வா சூரனே…

BGM

ஆண் : சாமி…
பெண் : நெய் விளக்கு ஏத்தி வச்சு…
ஆண் : சாமி…
பெண் : நெல்லுமணி எடுத்து வந்தோம்…
ஆண் : சாமி…
பெண் : நெத்துகாய ஒடச்சு வச்சோம்…
ஆண் : சாமி…
பெண் : முக்கானியா பறிச்சு வந்து…

பெண் : ஆஹா வீரனே… வீரனே…
வீரனே… மாவீரனே…

பெண் : ஓடி வா… தேடி வா… ஆடி வா…
நீ வீரனா…
ஓடி வா… தேடி வா… ஆடி வா…
நீ வீரனா…

ஆண் : சாமி…
பெண் : வீராதி வீரனே…
சூராதி சூரனே…
ஆண் : சாமி
பெண் : என்னை காப்பவனே…
வினை தீர்ப்பவனே…
ஆண் : சாமி…

ஆண் : சாமி…
பெண் : வீராதி வீரனே…
சூராதி சூரனே…
ஆண் : சாமி…
பெண் : என்னை காப்பவனே…
வினை தீர்ப்பவனே…
ஆண் : சாமி…


Notes : Veeran Thiruvizha Song Lyrics in Tamil. This Song from Veeran (2023). Song Lyrics penned by Muthamil. வீரன் திருவிழா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top