நினைத்தால் நெஞ்சுகுழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன், ஹரிஹரன் & ஹரிணிதேவாஅப்பு

Ninaithal Nenjukuzhi Song Lyrics in Tamil

BGM

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

பெண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ…
புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

BGM

பெண் : பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ…
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ…

ஆண் : மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ…

பெண் : வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ…
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ…

ஆண் : அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ…
நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ…

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

BGM

ஆண் : நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ…
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ…

பெண் : வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ…

ஆண் : கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ…
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ…

பெண் : இமைகையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ…
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ…

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

BGM

Notes : Ninaithal Nenjukuzhi Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. நினைத்தால் நெஞ்சுகுழி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading