நிலா காயும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மனோஇளையராஜாசெம்பருத்தி

Nila Kayum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

ஆண் : பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

—BGM—

ஆண் : தென்றல் தேரில் நாம்தான் போகும் நேரம் பார்த்து…
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து…

பெண் : கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்…
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்…

ஆண் : நினைத்தால் இது போல் ஆகாததேது…
பெண் : அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது…

ஆண் : நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
ஆண் : உலா போக நீயும் வரணும்…

—BGM—

பெண் : மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட…
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட…

ஆண் : அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்…
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்…

பெண் : நடக்கும் தினமும் ஆனந்த யாகம்…
ஆண் : சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்…

பெண் : அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

பெண் : பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…

ஆண் : அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
ஆண் : உலா போக நீயும் வரணும்…


Notes : Nila Kayum Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. நிலா காயும் நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading