நிக்கட்டுமா போகட்டுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபெரியவீட்டுப் பண்ணக்காரன்

Nikkattumaa Pogattuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…
தாவணி போய் சேலை வந்து…
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி…

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா…
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே…

BGM

பெண் : ஓடையில் நான் அமர்ந்தேன்…
அதில் என் முகம் பார்த்திருந்தேன்…
ஓடையில் பார்த்த முகம்…
அது உன் முகம் ஆனதென்ன…
வாடையில் மாறிடும் பூவினைப்போல்…
என் நெஞ்சமும் ஆனதென்ன…

ஆண் : தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்…
தோரண வாசலிலே ஒரு சோடியை கைப்பிடித்தேன்…
பிடித்த கரம் இணைந்திடுமா…
இணைந்திடும் நாள் வருமா…

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா…
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே…
தாவணி போய் சேலை வரும்…
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்…

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…

BGM

ஆண் : ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி…
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி…
மல்லிகை பூச்செடி பூத்தது போல்…
என் உள்ளமும் பூத்ததடி…

பெண் : அம்மனின் கோவிலிலே…
அன்று ஆசையில் நான் நடந்தேன்…
உன் மனக் கோவிலிலே…
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்…
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள்வருமா…

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…

பெண் : தாவணி போய் சேலை வந்து…
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்…

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…

பெண் : சோலை கருங்குயிலே சோலை கருங்குயிலே…


Notes : Nikkattumaa Pogattuma Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Mu. Metha. நிக்கட்டுமா போகட்டுமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading