முத்து முத்து மேடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாபெரியவீட்டுப் பண்ணக்காரன்

Muthu Muthu Medai Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் ராசா ராசா…
நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா…

பெண் : ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே… ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால… ஓ…
ஓ உருகுது உயிர் இங்கே…
நீ இருப்பதுதான் எங்கே…

ஆண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் மானே மானே…
நித்தம் நித்தம் உன்னை எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் நானே நானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வீசும் இந்தக் காத்துல…
அந்த மேகம் கலஞ்சு போகுது…
பாடும் உந்தன் பாட்டுத்தான்…
எந்தன் காதில் வந்து கேக்குது…

பெண் : ஏதோ ஒரு ஏக்கம்தான்…
அது நாளும் என்ன வாட்டுது…
ஏதோ ஒரு ஏக்கம்தான்…
அது நாளும் என்ன வாட்டுது…
போன வழி என்ன தோணலியே…
சிறு குயிலே குயிலே சொல்லடி…

ஆண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் மானே மானே…
நித்தம் நித்தம் உன்னை எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் நானே நானே…

BGM

பெண் : ஜோடி கிளி வாடுதே…
உன்னை தேடி மனம் ஓடுதே…
ஏனோ உந்தன் ஞாபகம்…
புயல் போலே வந்து மோதுதே…

ஆண் : காலம் இனி மாறுமா…
நம்ம காதல் ஒண்ணா சேருமா…
காலம் இனி மாறுமா…
நம்ம காதல் ஒண்ணா சேருமா…
ஆச வச்ச இந்த ஏழ செஞ்ச…
தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா…

ஆண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் மானே மானே…
நித்தம் நித்தம் உன்னை எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் நானே நானே…
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே… ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால… ஓ…

ஆண் : ஓ உருகுது உயிர் இங்கே…
நீ இருப்பதுதான் எங்கே…
ஓ உருகுது உயிர் இங்கே…
நீ இருப்பதுதான் எங்கே…


Notes : Muthu Muthu Medai Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Muthulingam. முத்து முத்து மேடை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading