அன்பே நீ என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & மனோஇளையராஜாபாண்டியன்

Anbe Nee Enna Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…

பெண் : கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ…
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ…
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ…

பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா…
வைகை நீராட வந்த கள்ளழகா…
தேக்காலே சிற்பி செய்த தோலழகா…
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா…

பெண் : நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்…
நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்…
ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா…
மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா…

பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…

பெண் : கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ…
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ…
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ…

பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…

BGM

பெண் : அம்மாடி போட்டதென்ன சொக்குப் பொடி…
என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி…
பொன்னான கையை கொஞ்சம் தொட்டுப்பிடி…
சிங்கார ராகம் வைத்து மெட்டுப்படி…

பெண் : தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு…
நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு…
பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது…
காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது…

ஆண் : அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ…
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ…

ஆண் : கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ…
காலை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ…
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ…

ஆண் : அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ…
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ…
அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ…
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ…


Notes : Anbe Nee Enna Song Lyrics in Tamil. This Song from Pandiyan (1992). Song Lyrics penned by Vaali. அன்பே நீ என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading