நேற்றும் இன்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசச்சின் வாரியர்சச்சின் வாரியர்மறக்குமா நெஞ்சம்

Netrum Indrum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…
அரும்பு மலர அரைக்கணம்…
அது மலர்ந்தது எந்தன் புது முகம்…

ஆண் : தே மாதுளை இதழ்களால்…
தேன் வார்த்தை உதிக்கிறாள்…
நான் பார்த்தை பார்த்துமே…
பாராததாய் நடிக்கிறாள்…

ஆண் : இந்த நாடக அரங்கில்…
நாட்கள் நகருதே…
இந்தக் காவியக் கதையில்…
காய்ச்சல் கனலுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேய்… காற்றும் இவளே…
ஹேய்… தோள் சிறகும் இவளே…
ஹேய்… என் வானம் முகில்…
மழை அனைத்துமே இவள்…

ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…
அரும்பு மலர அரைக்கணம்…
அது மலர்ந்தது எந்தன் புது முகம்…

BGM

ஆண் : பேச வேண்டி வருவேனே ஓடி…
உனை பார்த்ததும் மறந்து போகும் சேதி…

ஆண் : ஒத்திகைகள் பல வீட்டில் செய்தும்…
அவை போதவில்லை அதுதானே மீதி…
புரியாத பல கேள்வி வந்தும்…
திரியாத வரம் வேண்டிக் கொள்வேன்…

ஆண் : அறியாத வயதென்று சொல்வாய்…
அதை நான் எழுதி தாண்டிச் செல்வேன்…
இது சூரியகாந்தி பூவின் இதயமே…
நீ போகிற திசையில் தானே திரும்புமே…

ஆண் : ஹேய்… காற்றும் இவளே…
ஹேய்… தோள் சிறகும் இவளே…
ஹேய்… என் வானம் முகில்…
மழை அனைத்துமே இவள்…

BGM

ஆண் : தூக்கம் வந்து இரு கண்ணை சுழட்டும்…
உன் பிம்பம் வந்து இடை நின்று கெடுக்கும்…
புத்தகங்கள் பல பாடல் உரைக்கும்…
அது மீண்டும் மீண்டும் இவள் பெயரே உதிக்கும்…

ஆண் : பலர் சூழ வரும் கூட்டம் என்றால்…
உனை மட்டும் தனியாக பார்ப்பேன்…
பலர் கூச்சல் இடுகின்ற போது…
குரலாக உனை மட்டும் கேட்பேன்…

ஆண் : தினம் பேசிட வேண்டும்…
பெண்ணே அனுமதி…
உனை பார்த்திடும் நொடிகள்…
எல்லாம் வெகுமதி…

ஆண் : ஹேய்… காற்றும் இவளே…
ஹேய்… தோள் சிறகும் இவளே…
ஹேய்… என் வானம் முகில்…
மழை அனைத்துமே இவள்…

ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…


Notes : Netrum Indrum Song Lyrics in Tamil. This Song from Marakkuma Nenjam (2023). Song Lyrics penned by Thamarai. நேற்றும் இன்றும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading