நெஞ்சுக்குள் பெய்திடும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், தேவன் ஏகாம்பரம் & வி.வி. பிரசன்னாஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

—BGM—

ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…
கள்ளத்தனம் ஏதும் இல்லா…
புன்னகையோ போகன்வில்லா…

ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ…
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…

ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும்…
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…
இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே…

ஆண் : இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

குழு (ஆண்கள்) : போகாதே…

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை… ஹோ…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

—BGM—

ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய்…

குழு (பெண்கள்) : தூக்கிச் சென்றாய்…

ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய்…
உன்னை தாண்டி போகும் போது…

குழு (பெண்கள்) : போகும் போது…

ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு…

ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே…
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே…
காதல் எனை கேட்கவில்லை…
கேட்காதது காதல் இல்லை…

ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே…
என தோன்றும் நேரம் இதுதானே…
நீ இல்லை இல்லை என்றாலே…
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே…

குழு (பெண்கள்) : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் & குழு (பெண்கள்) : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…

ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

—BGM—


Notes : Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. நெஞ்சுக்குள் பெய்திடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading