முன்தினம் பார்த்தேனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிரசாந்தினி & நரேஷ் ஐயர்ஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Mundhinam Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : ஹாய் மாலினி…
ஐ எம் கிருஷ்ணன்…
நான் இத சொல்லியே ஆகனும்…
நீ அவ்வளவு அழகு…
இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு…
இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க…
அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

—BGM—

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

—BGM—

குழு (ஆண்கள்) : காதலே… சுவாசமே…

—BGM—

ஆண் : துலாத் தட்டில் உன்னை வைத்து…
நிகர் செய்ய பொன்னை வைத்தால்…
துலாபாரம் தோற்காதோ பேரழகே…

பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை…
முதல் காதல் சிந்தும் கண்ணை…
அணைக்காமல் போவேனோ… ஆருயிரே…

ஆண் : ஓ… நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி…
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி…
வினா நூறு கனாவும் நூறு…
விடை சொல்லடி…

பெண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
உள்ளமும் புண்ணானதே…

பெண் : இத்தனை நாளாக…

ஆண் : ஓ மை லவ்…

பெண் : உன்னை நான் பாராமல்…

ஆண் : எஸ் மை லவ்…

பெண் : எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

—BGM—

பெண் : கடல் நீலம் மங்கும் நேரம்…
அலைவந்து தீண்டும் தூரம்…
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே…

ஆண் : தலை சாய்க்க தோளும் தந்தாய்…
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்…
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே…

பெண் : பகல் நேரம் கனாக்கள் கண்டேன்…
உறங்காமலே…
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்…
நெருங்காமலே…
உனையன்றி எனக்கு ஏது…
எதிர்காலமே…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

—BGM—

ஆண் : வெண்ணிலா…
வெண்ணிலா… வெண்ணிலா…

—BGM—


Notes : Mundhinam Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading