காதல் ரோஜாவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா & எஸ்.பி. பாலசுப்ரமண்யம்ஏ. ஆர். ரகுமான்ரோஜா

Kadhal Rojave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

—BGM—

பெண் : லலல லலலால லலலா…
லலல லலலால லலலா…
லலலா லலா லல லல லலலா…
லலலா லலா லல லல லலலா…

—BGM—

ஆண் : தென்றல் என்னை தீண்டினால்…
சேலை தீண்டும் ஞாபகம்…
சின்ன பூக்கள் பார்க்கையில்…
தேகம் பார்த்த ஞாபகம்…
வெள்ளி ஓடை பேசினால்…
சொன்ன வார்த்தை ஞாபகம்…
மேகம் ரெண்டு சோ்கையில்…
மோகம் கொண்ட ஞாபகம்…

ஆண் : வாயில்லாமல் போனால்…
வார்த்தையில்லை பெண்ணே…
நீயில்லாமல் போனால்…
வாழ்க்கையில்லை கண்ணே…
முள்ளோடு தான் முத்தங்களா… சொல் சொல்…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…

—BGM—

ஆண் : வீசுகின்ற தென்றலே…
வேலையில்லை நின்று போ…
பேசுகின்ற வெண்ணிலா…
பெண்மையில்லை ஓய்ந்து போ…
பூ வளா்த்த தோட்டமே…
கூந்தலில்லை தீா்ந்து போ…
பூமி பார்க்கும் வானமே…
புள்ளியாக தேய்ந்து போ…

ஆண் : பாவையில்லை பாவை…
தேவையென்ன தேவை…
ஜீவன் போன பின்னே…
சேவை என்ன சேவை…
முள்ளோடு தான் முத்தங்களா… சொல் சொல்…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…

—BGM—


Notes : Kadhal Rojave Song Lyrics in Tamil. This Song from Roja (1992). Song Lyrics penned by Vairamuthu. காதல் ரோஜாவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading