மலா்களே மலா்களே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்லவ் பேர்ட்ஸ்

Malargaley Malargaley Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

பெண் : மேகம் திறந்து கொண்டு…
மண்ணில் இறங்கி வந்து…
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா…

ஆண் : மார்பில் ஒளிந்து கொண்டால்…
மாறன் அம்பு வரும்…
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா…

பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும்…
பள்ளி அறையா அறையா…
மலா் சூடும் வயதில் என்னை…
மறந்து போவதுதான் முறையா…

ஆண் : நினைக்காத நேரமில்லை…
காதல் ரதியே ரதியே…
உன் பேரை சொன்னால் போதும்…
நின்று வழி விடும் காதல் நதியே…

பெண் : என் சுவாசம் உன் மூச்சில்…
உன் வார்த்தை என் பேச்சில்…

ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்…
என் வாழ்வே வா…

ஆண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

ஆண் : பூவில் நாவிருந்தால்…
காற்று வாய் திறந்தால்…
காதல் காதல் என்று பேசும்…

பெண் : நிலா தமிழ் அறிந்தால்…
அலை மொழி அறிந்தால்…
நம் மேல் கவி எழுதி வீசும்…

ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே…
வண்ண நிலவே நிலவே…
வானோடு நீலம் போலே…
இளைந்து கொண்டது இந்த உறவே…

பெண் : உறங்காத நேரம் கூட…
உந்தன் கனவே கனவே…
ஊனோடு உயிரை போல…
உறைந்து போனதுதான் உறவே…

ஆண் : மறக்காது உன் ராகம்…
மரிக்காது என் தேகம்…

பெண் : உனக்காக உயிர் வாழ்வேன்…
வா என் வாழ்வே வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…

பெண் : விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…

ஆண் : கண்ணோடும் நீதான் வா…

—BGM—


Notes : Malargaley Malargaley Song Lyrics in Tamil. This Song from Love Birds (1996). Song Lyrics penned by Vairamuthu. மலா்களே மலா்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading