நெஞ்சம் ஒருமுறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்வசீகரா

Nenjam Oru Murai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…

பெண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது…
உள்ளம் உனக்குத்தான் என்றது…

பெண் : சத்தமின்றி உதடுகளோ…
முத்தம் எனக்கு தா என்றது…
உள்ளம் என்ற கதவுகளோ…
உள்ளே உன்னை வா என்றது…

—BGM—

பெண் : நீதான் நீதான்…
எந்தன் உள்ளம் திறந்து…
உள்ளே உள்ளே வந்த…
முதல் வெளிச்சம்…

—BGM—

ஆண் : நீதான் நீதான்…
எந்தன் உயிா் கலந்து…
நெஞ்சை நெஞ்சை தொட்ட…
முதல் ஸ்பாிசம்…

பெண் : கன்னம் என்னும்…
தீ அணைப்பு துறையில்…
உன் முத்தம்தானே…
பற்றி கொண்ட முதல் தீ…

ஆண் : கிள்ளும்போது…
எந்தன் கையில் கிடைத்த…
உன் விரல்தானே…
நானும் தொட்ட முதல் பூ…

பெண் : உன் பாா்வைதானே…
எந்தன் நெஞ்சில் முதல் சலனம்…

ஆண் : அன்பே என்றும் நீ அல்லவா…
கண்ணால் பேசும் முதல் கவிதை…

பெண் : காலம் உள்ள காலம் வரை…
நீதான் எந்தன் முதல் குழந்தை…

ஆண் : நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…

பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது…

—BGM—

ஆண் : காதல் என்றால் அது…
பூவின் வடிவம்…
ஆனால் உள்ளே அது…
தீயின் உருவம்…

—BGM—

பெண் : காதல் வந்தால்…
இந்த பூமி நழுவும்…
பத்தாம் கிரகம் ஒன்றில்…
பாதம் பரவும்…

ஆண் : காதல் வந்து…
நெஞ்சுக்குள்ளே நுழையும்…
ஒரு தட்பவெப்ப…
மாற்றங்களும் நிகழும்…

பெண் : காதல் வந்து…
கண்ணை தட்டி எழுப்பும்…
அது ஊசி ஒன்றை…
உள்ளுக்குள்ளே அனுப்பும்…

ஆண் : இந்த காதல் வந்தால்…
இலை கூட மலை சுமக்கும்…

பெண் : காதல் என்ற வாா்த்தையிலே…
ஒன்றாய் சோ்ந்து நாம் தொலைவோம்…

ஆண் : காதல் என்ற காற்றினிலே…
தூசி போல நாம் அலைவோம்…

ஆண் : நெஞ்சம் ஒரு முறை நீ என்றது…

பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது…

ஆண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது…

பெண் : உள்ளம் உனக்குத்தான் என்றது…

ஆண் : சத்தமின்றி உதடுகளோ…
முத்தம் எனக்கு தா என்றது…

பெண் : உள்ளம் என்ற கதவுகளோ…
உள்ளே உன்னை வா என்றது…

—BGM—


Notes : Nenjam Oru Murai Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Pa. Vijay. நெஞ்சம் ஒருமுறை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading