நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணகுமார் குன்னத்ஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Neeye Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…

—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

—BGM—

ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால்…
என் நெஞ்சில் பாரம் வந்தால்…
சாய்வேனே உன் தோளிலே…

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்…
என் பிள்ளை வாடாதென்றும்…
சொல்வாயே அந்நாளிலே…

ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்…
உன் மகனாகும் வரம் தருவாய்…

ஆண் : உன் வீட்டு சின்ன குயில்…
நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே…
நான் வயது வளா்ந்தால் கூட…
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட…

—BGM—

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்…
நீராய் கண்ணீரை விட்டாய்…
பூவாச்சு என் தோட்டமே…

ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை…
போராடி வெல்லும் பிள்ளை…
பூமாலை என் தோளிலே…

ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை…
முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்…

ஆண் : வற்றாத கங்கை நதியாய்…
பெய்யாத மங்கை நதியாய்…
நீ வாழ்க…

ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு…
எந்த நாளும் நீதான் கிழக்கு…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

—BGM—


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from M. Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Vaali. நீயே நீயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading