நீ உன்னை மாற்றிக்கொண்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்ஹரிசரண்விஜய் ஆண்டனிதிமிரு புடிச்சவன்

Nee Unnai Matrikondal Song Lyrics in Tamil


ஆண் : நீ உன்னை மாற்றிகொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைகொண்டால்…
உயரம் கூடும்…

ஆண் : மூச்சு விடுவது வாழ்க்கை இல்லையே…
முயற்சி செய்து பார் வானம் எல்லையே…

ஆண் : மனசாட்சியை தினம் மாட்டி வை அருகில்…
அழகு என்பதே நாம் செய்திடும் செயலில்…

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்…
உயரம் கூடும்…

—BGM—

ஆண் : எல்லோரும் நல்லவன்தான்பா…
சூழல் தான் ஆக்குது தப்பா…
திருந்திட வாய்புகள் வந்தா…
திரும்பவும் ஆவான் டாப்பா…

ஆண் : நீ செய்யிற வேலையே கடவுளடா…
உன் வெற்றிக்கு தோல்விதான் சூத்திரம்டா…
நீ தெளிவாக இன்னைக்கு வேலை செஞ்சா…
வரும் தடைகளை நாளைக்கு தாண்டுவடா…

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்…
உயரம் கூடும்…

—BGM—

ஆண் : அன்பாலே ஈர்க்கலாம் ஊரை…
உதவியே வாங்கலாம் பேரை…
குறை சொல்லி வாழாதே என்றும்…
விதி மீது கை காட்ட தோன்றும்…

ஆண் : வலியிங்கு வாழ்க்கையே இல்லையடா…
வலிக்காமல் சிகிச்சைகள் இங்கு இல்லடா…
உன் நேர்மையில் நம்பிக்கை வச்சுக்கடா…
இனி அது உன்னை வைக்குமே உச்சிலடா…

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்…
உயரம் கூடும்…


Notes : Nee Unnai Matrikondal Song Lyrics in Tamil. This Song from Thimiru Pudichavan (2018). Song Lyrics penned by Eknath. நீ உன்னை மாற்றிக்கொண்டால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading