பொய் சொல்ல கூடாது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன்வித்யாசாகர்ரன்

Poi Solla Koodadhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…
பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…

ஆண் : கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்…
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்…

ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்…
ஐய்யயோ தப்பித்தாய்…
கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்…

ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…

—BGM—

ஆண் : அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்…
ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன்…

ஆண் : கண்டவுடன் என்னையே…
தின்றதடி விழியே…
என்னை விட்டு தனியே…
சென்றதடி நிழலே…

ஆண் : அடி சுட்டும் விழி சுடரே…
நக்ஷத்திர பயிரே…
ரெக்கை கட்டி வா நிலவே…

ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்…
ஐய்யயோ தப்பித்தாய்…
கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்…

ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…

—BGM—

ஆண் : ஓரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே…
நீ ஒற்றை துளியா கோடிக் கடலா…
உண்மை சொல்லடி பெண்ணே…

ஆண் : கன்னகுழி நடுவே…
சிக்கி கொண்டேன் அழகே…
நெற்றி முடி வழியே…
தப்பி வந்தேன் வெளியே…

ஆண் : அடி பொத்தி வைத்த புயலே…
தத்தளிக்கும் திமிரே…
வெட்கம் விட்டு வா வெளியே…

ஆண் : நில் என்று கண்டிதாய்…
உள் சென்று தண்டிதாய்…
சொல் என்று கெஞ்சதான்…
சொல்லாமல் வஞ்சித்தாய்…

ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…

ஆண் : கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்…
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்…

ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்…
ஐய்யயோ தப்பித்தாய்…
கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்…


Notes : Poi Solla Koodadhu Song Lyrics in Tamil. This Song from Run (2004). Song Lyrics penned by Arivumathi. பொய் சொல்ல கூடாது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading