நீ பாதி நான் பாதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாகேளடி கண்மணி

Nee Pathi Naan Pathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

ஆண் : நீயில்லையே இனி நானில்லையே…
உயிர் நீயே…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

—BGM—

பெண் : வானப்பறவை வாழ நினைத்தால்…
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்…

ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்…
கையில் விழுந்த பருவப்பாடல்…

பெண் : மஞ்சள் மணக்கும்…
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு…
அர்த்தமிருக்கும் உன்னாலே…

ஆண் : மெல்ல சிரிக்கும்…
உன் முத்துநகை ரத்தினத்தை…
அள்ளித்தெளிக்கும் முன்னாலே…

பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது…

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

—BGM—

ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்…
வலது விழியும் கலங்கி விடுமே…

பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்…
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்…

ஆண் : சொர்கம் எதற்கு…
என் பொன்னுலகம் பெண்ணுருவில்…
பக்கம் இருக்கு கண்ணே வா…

பெண் : இந்த மனம்தான்…
என் மன்னவனும் வந்து உலவும்…
நந்தவனம் தான் அன்பே வா…

ஆண் : சுமையானது ஒரு சுகமானது…
சுவை நீதான்…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…

ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

—BGM—


Notes : Nee Pathi Naan Pathi Song Lyrics in Tamil. This Song from Keladi Kannmani (1990). Song Lyrics penned by Vaali. நீ பாதி நான் பாதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading