| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | அன்புள்ள ரஜினிகாந்த் |
Then Poove Poove Vaa Song Lyrics in Tamil
ஆண் : தேன் பூவே பூவே வா…
தென்றல் தேட…
—BGM—
ஆண் : பூந்தேனே தேனே வா…
தாகம் கூட…
—BGM—
ஆண் : நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்…
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்…
நூறு ராகம் நெஞ்சோடுதான்…
பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா…
தென்றல் தேட…
—BGM—
ஆண் : பனி விழும் புல்வெளியில்…
தினம் தினம் பொன் பொழுதில்…
பெண் : கனி விழும் உன் மடியில்…
கலந்திடும் உன் உறவில்…
ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது…
பெண் : ஓ… கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது…
ஆண் : தேவதேவி என்னோடுதான்…
பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா…
தென்றல் தேட…
ஆண் : பூந்தேனே தேனே வா…
தாகம் கூட…
—BGM—
பெண் : இடையினில் உன் விரல்கள்…
எழுதிடும் என் சுகங்கள்…
ஆண் : அணைக்கையில் உன் உடலில்…
அழுந்திடும் என் நகங்கள்…
பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது…
ஆண் : காதல் யோகம்தான் கட்டில் மீது…
பெண் : காணவேண்டும் உன்னோடுதான்…
ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட…
—BGM—
ஆண் : பூந்தேனே தேனே வா…
தாகம் கூட…
பெண் : நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்…
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்…
நூறு ராகம் நெஞ்சோடுதான்…
ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா…
பெண் : லால… லாலா…
—BGM—
ஆண் & பெண் : லா லலல லலா… லால லாலா…
Notes : Then Poove Poove Vaa Song Lyrics in Tamil. This Song from Anbulla Rajinikanth (1984). Song Lyrics penned by Vaali. தேன் பூவே பாடல் வரிகள்.

