நீ முத்தம் ஒன்று கொடுத்தால்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித் & ஸ்வேதா மோகன்மணி சர்மாபோக்கிரி

Nee Mutham Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…

ஆண் : செங்காந்தல் இதழ் என்பதில்…
நான் கண்டேன் நீ என் தமிழ்…
மின் காந்த பேச்சில் மொத்தமாய்…
நான் கேட்டேன் இசை தமிழ்…

ஆண் : நீ கொஞ்சம் நாடக தமிழ்…
நீ கொஞ்சம் மன்மத தமிழ்…
உன் தமிழ் என் தமிழ்…
டி எ எம் ஐ எல் தமிழ் தமிழ் தமிழ்…

BGM

ஆண் : அன்பே உன் இதழின் சிணுங்களெல்லாம்…
பிள்ளை தமிழே… பிள்ளை தமிழே…
அங்கங்கே உனக்குள் படித்து கொண்டேன்…
சங்க தமிழே… சங்க தமிழே…

பெண் : நீ என்னை தீண்டினால்…
என் மேனியில் நாணதமிழ்…
நம் காதல் சேர்ந்த பின்…
தமிழோடுதான் நான்கு தமிழ்…

ஆண் : உனை வாசித்தேன்…
பெண் : வாசித்து…
ஆண் : நேசித்தேன்…
பெண் : நேசித்து…

ஆண் : சுவாசித்தேன்…
பெண் : சுவாசித்து…
ஆண் : யாசித்தேன்…
பெண் : ஹா ஹா…

BGM

ஆண் : உன் ஒற்றை விழி பார்வையில்…
நான் கற்றுகொண்டேன் தமிழ்…
உன் கற்றை ஒளி புன்னகை…
அதில் ஒற்றி கொண்டேன் தமிழ்…

ஆண் : உன் வயசின் மொத்தம் தமிழ்…
உன் அழகின் மொத்தம் தமிழ்…
நீ தமிழ் நான் தமிழ்…
டி எ எம் ஐ எல் தமிழ் தமிழ் தமிழ்…

BGM

பெண் : என் வாசம் தெரிக்கும் இளமை எல்லாம்…
கன்னி தமிழே… கன்னி தமிழே…
உன் வாசம் கிடைத்த மறு வருஷம்…
அன்னை தமிழே… அன்னை தமிழே…

ஆண் : காலங்கள் தீரலாம்…
தீராதடி காதல் தமிழ்…
பெண் : ஓ ஹோ ஓ…

ஆண் : நரை கூடி போகலாம்…
மாறாதடி ஆசை தமிழ்…
பெண் : ஓ ஹோ ஓ…

ஆண் : உன்னை சந்தித்தேன்…
பெண் : உன்னை சந்தித்தேன்…
ஆண் : தித்தித்தேன்…
பெண் : தித்தித்தேன்…

ஆண் : ஜீவித்தேன்…
பெண் : ஜீவித்தேன்…
ஆண் : உயிர் தேய்ந்தேன்…
பெண் : தேய்ந்தேன்…

BGM

ஆண் : கண் கண்ணும் முட்டிக்கொண்டபின்…
இரு விண்ணும் மண்ணும் தமிழ்…
மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை…
அதில் மையல் கொள்ளும் தமிழ்…

ஆண் : உடல் உற்றார் இந்த தமிழ்…
உயிர் கற்றார் இந்த தமிழ்…
வான் தமிழ் வை தமிழ்…
டி எ எம் ஐ எல் தமிழ் தமிழ் தமிழ்…

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…


Notes : Nee Mutham Ondru Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Pa. Vijay. நீ முத்தம் ஒன்று கொடுத்தால் பாடல் வரிகள்.


Scroll to Top