இதோ எந்தன் தெய்வம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & எஸ்.ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்பாபு

Idho Endhan Deivam Song Lyrics in Tamil

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…

ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…

—BGM—

ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்…
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்…
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்…
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்…

ஆண் : குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்…
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்…
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்…
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்…

ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…

—BGM—

ஆண் : பல நூல் படித்து நீ அறியும் கல்வி…
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்…

ஆண் : பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…

—BGM—

ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை…
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை…
அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்…
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்…
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்…

ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
ஹாஆஅ… ஹாஆஅ… ஹோ ஓஒ… ஹோ ஓஓ…

Notes : Idho Endhan Deivam Song Lyrics in Tamil. This Song from Babu (1971). Song Lyrics penned by Vaali. இதோ எந்தன் தெய்வம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading