வரதப்பா வரதப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்பாபு

Varadhappa Varadhappa Song Lyrics in Tamil


ஆண் : வரதப்பா வரதப்பா…
கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா…
குழு : எங்க அப்பா…

BGM

ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா…
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி…
வஞ்சி வருதப்பா…

குழு : ஐ… ஆ… அஆய்…
ஐஐ… ஐசலக்கா…
ஐஐ…அக்ரிபச்சா…

ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா…
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி…
வஞ்சி வருதப்பா…

ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா…
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி…
வஞ்சி வருதப்பா…

ஆண் : நகையும் நட்டும் போட்டிருந்தா…
சொர்ணலட்சுமி…
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா…
தான்யலட்சுமி…

குழு : டான்ட டன்டட…
டான்ட டன்டட டான்டான்டான்டா…

ஆண் : நகையும் நட்டும் போட்டிருந்தா…
சொர்ணலட்சுமி…
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா…
தான்யலட்சுமி…

ஆண் : மானம் காக்க துணிஞ்சு நின்னா…
வீரலட்சுமி…
மானம் காக்க துணிஞ்சு நின்னா…
வீரலட்சுமி…
எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா…
விஜயலட்சுமி…

ஆண் : எத்தனை லட்சுமி பாருங்கடா… ஆ…
இவ என்ன லட்சுமி கூறுங்கடா… ஆ…

BGM

ஆண் : எத்தனை லட்சுமி பாருங்கடா… ஆ…
இவ என்ன லட்சுமி கூறுங்கடா… ஆ…
நம்ம அத்தன பேருக்கும் படி அளக்கும்…
அன்னலட்சுமி ஆகுமடா…

குழு : ஆமா அன்னலட்சுமி ஆகுமடா…

ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா…
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி…
வஞ்சி வருதப்பா…

BGM

குழு : ஐ… ஆ… அஆய்…
ஐஐ… ஐசலக்கா…
ஐஐ… அக்ரிபச்சா…

ஆண் : தண்டை சத்தம் கலகலன்னு…
முன்னால் வருகுது…
வாழைத் தண்டு போல கால் நடந்து…
பின்னால் வருகுது…

குழு : டான்ட டன்டட…
டான்ட டன்டட டான்டான்டான்டா…

ஆண் : பார்க்குறப்ப பசி மயக்கம்…
தன்னால் வருகுது…
பார்க்குறப்ப பசி மயக்கம்…
தன்னால் வருகுது…
பேச்ச கேட்குறப்போ வந்த மயக்கம்…
தானா குறையுது…

ஆண் : சாதம் போல சிரிக்கிறா…
மீன் கொழம்பு போல மணக்குறா…
ரகசியமா ஏதும் சொன்னா…
ரசத்தப் போல கொதிக்கிறா…

குழு : ஆஹா… ரசத்தப் போல கொதிக்கிறா…

ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா…
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி…
வஞ்சி வருதப்பா…

BGM

ஆண் : குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது…
அது அனுமந்தராவ்… ஆ…
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது…

BGM

ஆண் : மேரியம்மா கேரியரில் எறா இருக்குது…
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது…
அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கெடக்குது…

ஆண் : சமையல் எல்லாம் கலக்குது…
அது சமத்துவத்தை வளர்க்குது…
சாதி சமய பேதமெல்லாம்…
சோத்தைக்கண்டா பறக்குது…

குழு : ஆஹா… சோத்தைக்கண்டா பறக்குது…

ஆண் : வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா…
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி…
வஞ்சி வருதப்பா…

BGM

குழு : ஐ… ஆ… அஆய்…
ஐஐ… ஐசலக்கா…
ஐஐ… அக்ரிபச்சா…
ஐஐ… ஐசலக்கா…
ஐஐ… அக்ரிபச்சா…

குழு : ஐசலக்கா அக்ரிபச்சா…
ஐசலக்கா அக்ரிபச்சா…
ஐசலக்கா அக்ரிபச்சா… ஹே…


Notes : Varadhappa Varadhappa Song Lyrics in Tamil. This Song from Babu (1971). Song Lyrics penned by Vaali. வரதப்பா வரதப்பா பாடல் வரிகள்.


Scroll to Top