குல்முகர் மலரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஹாரிஸ் ஜெயராஜ்மஜ்னு

Gulmohar Malare Song Lyrics in Tamil


குழு : மலரே மலரே மலரே மலரே…
முகவரி என்ன…
உன் மனதில் மனதில் மனதில் உள்ள…
முதல் வரி என்ன…

BGM

ஆண் : குல்முகர் மலரே குல்முகர் மலரே…
கொல்ல பார்க்காதே…
உன் துப்பட்டாவில் என்னை கட்டி…
தூக்கில் போடாதே…

குழு : ஏ அஹியே… ஓ ஹோ…

ஆண் : குல்முகர் மலரே குல்முகர் மலரே…
கொல்ல பார்க்காதே…
உன் துப்பட்டாவில் என்னை கட்டி…
தூக்கில் போடாதே…
தூக்கில் போடாதே… தூக்கில் போடாதே…
தூக்கில் போடாதே…

ஆண் : மலரின் தொழிலே…
உயிரை கொல்லுவது இல்லையடி…
மனிதன் உயிரை கொன்றால்…
அதன் பேர் மலரே இல்லையடி…
அதன் பேர் மலரே இல்லையடி…

ஆண் : குல்முகர் மலரே குல்முகர் மலரே…
கொல்ல பார்க்காதே…
உன் துப்பட்டாவில் என்னை கட்டி…
தூக்கில் போடாதே…
தூக்கில் போடாதே… தூக்கில் போடாதே…

குழு : மலரே மலரே மலரே மலரே…
முகவரி என்ன…
உன் மனதில் மனதில் மனதில் உள்ள…
முதல் வரி என்ன…

குழு : மலரே மலரே மலரே மலரே…
முகவரி என்ன…
உன் மனதில் மனதில் மனதில் உள்ள…
முதல் வரி என்ன…

குழு : முதல் வரி என்ன…
முதல் வரி… முதல் வரி…

ஆண் : உயிரை திருகி உந்தன் கூந்தல்…
சூடி கொள்ளாதே…
என் உதிரம் கொண்டு…
உதட்டு சாயம் பூசிகொல்லாதே…

ஆண் : விண்மீன் பறிக்க வழியில்லை என்று…
கண்களை பறிக்காதே…
என இரவை எாித்து குழைத்து குழைத்து…
கண் மை பூசாதே…

ஆண் : என்னை விடவும் என்னை அறிந்தும்…
யார் நீ என்று கேட்காதே…
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்…
என்னையும் கவிஞன் ஆக்காதே…
என்னையும் கவிஞன் ஆக்காதே…

ஆண் : குல்முகர் மலரே குல்முகர் மலரே…
கொல்ல பார்க்காதே…
உன் துப்பட்டாவில் என்னை கட்டி…
தூக்கில் போடாதே…
தூக்கில் போடாதே… தூக்கில் போடாதே…
தூக்கி எரியாதே… ஹே ஹே…
தூக்கில் போடாதே… ஹே…

BGM

ஆண் : உடைந்த வார்த்தையில்…
உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்…
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு…
சத்தம் போடுகிறாய்…

ஆண் : கண்ணாடி நெஞ்சில் கல்லை எரிந்து…
கலகம் மூட்டுகிறாய்…
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென…
அறி குறி காட்டுகிறாய்…

ஆண் : மௌனம் என்பது உறவா பகையா…
வயது தீயில் வாட்டுகிறாய்…
ஏற்கனவே மனம் எரிமலைதானே…
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்…
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்…

குழு : மலரே மலரே மலரே மலரே…
முகவரி என்ன…
உன் மனதில் மனதில் மனதில் உள்ள…
முதல் வரி என்ன…

குழு : மலரே மலரே மலரே மலரே…
முகவரி என்ன…
உன் மனதில் மனதில் மனதில் உள்ள…
முதல் வரி என்ன…
முதல் வரி என்ன…

ஆண் : மலரே மலரே குல்முகர் மலரே…
கொல்ல பார்க்காதே…
உன் துப்பட்டாவில் என்னை கட்டி…
தூக்கில் போடாதே…

BGM

ஆண் : தூக்கில் போடாதே…

BGM

குழு : முதல் வரி என்ன…


Notes : Gulmohar Malare Song Lyrics in Tamil. This Song from Majunu (2001). Song Lyrics penned by Vairamuthu. குல்முகர் மலரே பாடல் வரிகள்.


Scroll to Top