ஓடி ஓடி உழைக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்நல்ல நேரம்

Odi Odi Uzhaikkanum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…

ஆண் : ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

—BGM—

ஆண் : வயுத்துகாக மனுஷன் இங்கே…
கயத்தில் ஆடுறான் பாரு…
ஆடி முடிச்சு இறங்கி வந்தா…
அப்புறம் தாண்டா சோறு…

—BGM—

ஆண் : வயுத்துகாக மனுஷன் இங்கே…
கயத்தில் ஆடுறான் பாரு…
ஆடி முடிச்சு இறங்கி வந்தா…
அப்புறம் தாண்டா சோறு…

ஆண் : நான் அன்போட சொல்லுறத கேட்டு…
நீ அத்தனை திறமையும் காட்டு…
இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு…
ஆளுக்கொன்னு கொடுப்பாங்க…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

—BGM—

ஆண் : சோம்பேறியாக இருந்து விட்டாக்க…
சோறு கிடைக்காது தம்பி…
சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா…
துணியும் இருக்காது தம்பி…

ஆண் : சோம்பேறியாக இருந்து விட்டாக்க…
சோறு கிடைக்காது தம்பி…
சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா…
துணியும் இருக்காது தம்பி…

ஆண் : இத அடுத்தவன் சொன்னா கசக்கும்…
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்…
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு…
அத்தனையும் சொல்லி போடு…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

—BGM—

ஆண் : வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்…
சட்டம் ஆகாது தம்பி…
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்…
சட்டம் ஆகணும் தம்பி…

ஆண் : வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்…
சட்டம் ஆகாது தம்பி…
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்…
சட்டம் ஆகணும் தம்பி…

ஆண் : நல்ல சமத்துவம் உண்டாகணும்…
அதிலே மகத்துவம் உண்டாகணும்…
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்…
படிப்பினை தந்தாகனும்…

ஆண் : நாட்டுக்கு படிப்பினை தந்தாகனும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

—BGM—


Notes : Odi Odi Uzhaikkanum Song Lyrics in Tamil. This Song from Nalla Neram (1972). Song Lyrics penned by Pulamaipithan. ஓடி ஓடி உழைக்கணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading