முதற்கனவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிஷ் ராகவேந்திராஹாரிஸ் ஜெயராஜ்மஜ்னு

Mudhar Kanavae Song Lyrics in Tamil


BGM

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…

BGM

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா…
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா…
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா…
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா…

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…

BGM

ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று…
காடு மேடு தேடி ஓடி…
இரு விழி இரு விழி தொலைத்துவிட்டேன்…

பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று…
சின்ன கண்கள் சிந்துகின்ற…
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்…

ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டாய்…
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்…

பெண் : இதயத்தை பறிதத்தற்கா என் ஜீவன் எடுக்கிறாய்…

பெண் : முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…

BGM

பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்…
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்துவிடு…

ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்…
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு…

பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை…
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை…
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை…

குழு (பெண்கள்) : வர சொல்லு தென்றலை…

ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே…
நீ நீரில் ஒளியாதே…
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்…
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்…

பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை…
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்…
மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய்…
உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்…

குழு (பெண்கள்) : தூங்கும் காதல் எழுப்புவாய்…

பெண் : தூங்கும் காதல் எழுப்புவாய்…

குழு (பெண்கள்) : தூங்கும் காதல் எழுப்புவாய்…

பெண் : நீ தூங்கும் காதல் எழுப்புவாய்…
தூங்கும் காதல் எழுப்புவாய்…


Notes : Mudhar Kanavae Song Lyrics in Tamil. This Song from Majunu (2001). Song Lyrics penned by Vairamuthu. முதற்கனவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading