நீ இருந்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஆசையில் ஒர் கடிதம்

Nee Irunthal Naan Song Lyrics in Tamil


BGM

{ பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்… } * (3)

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேஹே… நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீராட நதி தருவேன்…
நீ துடைக்க முகில் தருவேன்…
நீ உடுத்த மலர் தருவேன்…
நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீ நடக்கும் புல்வெளியில்…
பனித்துளிகள் துடைத்து வைப்பேன்…
நீ பேசும் தாய்மொழியில்…
வல்லினங்கள் களைந்து வைப்பேன்…

ஆண் : நீ கடந்த தெருவில்…
உந்தன் வாசம் தேடுவேன்…
நீ குளித்த நதியில் மூழ்கி…
மோட்சம் காணுவேன்…

ஆண் : உன் ஜன்னல் ஓரம்…
நான் காற்றாக வருவேன்…
நாள் ஒன்று வீதம்…
நான் பூக்கொண்டு தருவேன்…

ஆண் : கண்கள் தீண்டும் கனவைப் போலே…
நீ அறியாமல் நான் தொடுவேன்…
நீ என் காதலியானால்…

பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்…

BGM

ஆண் : வெள்ளை நிலா ஒளி திரட்டி…
உள்ளங்கையில் ஊற்றி வைப்பேன்…
காற்றலையில் இசை பிரித்து…
காதுகளில் தவழ வைப்பேன்…

ஆண் : கோபுரங்கள் ஏறி உந்தன்…
பேரை கூவுவேன்…
தாஜ்மஹாலின் மேலே உந்தன்…
பேரை எழுதுவேன்…

ஆண் : உன் கூந்தல் முடியில்…
நான் என் ஜீவன் முடிவேன்…
நீ ஊடல் கொண்டால்…
நான் உன் காலில் விழுவேன்…

ஆண் : ஒற்றை முத்தம் சிந்துவதென்றால்…
உன் மடியில் உயிர் விடுவேன்…
நீ என் காதலியானால்…

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீராட நதி தருவேன்…
நீ துடைக்க முகில் தருவேன்…
நீ உடுத்த மலர் தருவேன்…
நீ என் காதலியானால்…

ஆண் : நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…

BGM


Notes : Nee Irunthal Naan Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. நீ இருந்தால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading