ஆசையில் ஒர் கடிதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்தேவாஆசையில் ஒர் கடிதம்

Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

—BGM—

ஆண் : குளத்துக்குள்ளே ஒரு கல் எறிந்தேன்…
அலை அடிக்கும் என்று காத்திருந்தேன்…
குளக்கரையே ஒடைய கண்டேன்…
விதியே இது தகுமா…

ஆண் : பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன்…
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்…
கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ…
சரியோ இது சரியோ…

ஆண் : தவறுகள் மூட்டிய நெருப்பினிலே…
தாலியின் மஞ்சள் கருகுவதோ…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

—BGM—

ஆண் : நதி வலையில் வலி தெரிவதுண்டு…
விதி வலையில் வலி தெரிவதில்லை…
தெரிந்துகொண்டால் அதில் ருசியுமில்லை…
இனிமேல் என்ன கதையோ…

ஆண் : பால் குடத்தில் ஒரு எறும்பு விழ…
பல்லியென்று அதை வெறுப்பதென்ன…
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன…
பிழையோ என்ன பிழையோ…
கண்ணீர் என்னை தண்டிக்குமா…
காலங்கள் நாளை மன்னிக்குமா…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

—BGM—


Notes : Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. ஆசையில் ஒர் கடிதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading