அப்படி பாக்குறதுன்னா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி . உன்னிகிருஷ்ணன் & மாதங்கி ராஜசேகர்இளையராஜாஇவன்

Appadi Paarkurathunna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தன்ன தாக்குருதின்னா னான்னா…
தந்தான தாக்குருதின் தானா…

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…

பெண் : தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…

பெண் : என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல…
உன் பக்கம் பார்த்தேன்…
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன…
காணாமல் போனேன்…

பெண் : தில்தில் ரூபா ரூபா…
என்ன மந்திரம் பண்ண…
புல்புல் தாரா தாரா…
என்ன தந்திரம் பண்ண…

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…

—BGM—

பெண் : தொட்டுத் தொட்டு எனைப் பார்த்து…
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே…
எட்டுக் கட்டை உச்ச ஸ்தாயில்…
மெட்டுக் கட்டி ஜதி போட்டாயே…

பெண் : ஆதி தாளம் போட்டு எனை பாதியாக செய்து…
தத்தளிக்க விட்டாயே…
நெஞ்சிளமை மின்ன தண்ணிக்குள் செய்யும்…
சாதகங்கள் செய்தாயே…

பெண் : கல்யாணி நான் பாட கரகோஷம் கொட்டாதே…
கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சே…

—BGM—

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணா…
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…

—BGM—

ஆண் : சுற்றிச் சுழன்றிடும் கண்ணில்…
இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே…
பற்றி இழுத்தென்னை அள்ளும்…
கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே…

ஆண் : ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன்…
புத்தகத்தில் அச்சானேன்…
கண்டவுடன் தாவும் கண்ட படி கவ்வும்…
உன்னிடத்தில் பித்தானேன்…

ஆண் : மின்சார சிற்பத்தை கொஞ்சம்…
கை தீண்டிப் பார்த்தேனே…
பேரின்ப வெள்ளத்தில்…
நான் மூழ்கிப் போனேனே…

—BGM—

ஆண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணா…
தன்ன தாக்குருதின்ன னா னா…
தந்தான தாக்குருதின் தானா…

பெண் : என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல…
உன் பக்கம் பார்த்தேன்…
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன…
காணாம போனேன்…

பெண் : தில்தில் ரூபா ரூபா…
என்ன மந்திரம் பண்ண…
புல்புல் தாரா தாரா…
என்ன தந்திரம் பண்ண…

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணா…


Notes : Appadi Paarkurathunna Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Vaali. அப்படி பாக்குறதுன்னா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading