நாட்டுக்குள்ள நம்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எஸ். பி. சைலஜாசந்திரபோஸ்விடுதலை (1986)

Nattukulla Namma Pathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : ஹேய்… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி…
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி…

ஆண் : ஹேஹே… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

—BGM—

ஆண் : நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி… ஹான்…
பெண் : நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு…

ஆண் : கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது…
பெண் : அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது…

ஆண் : கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி…
தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி… ஹா ஹான்…

குழு : நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க…
ஆண் : ஹோய்…
குழு : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

—BGM—

ஆண் : சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு… ஆஹான்…
பெண் : காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு…

ஆண் : தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா…
பெண் : அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு…

ஆண் : அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா…
பெண் : மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா…

ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி…
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…

—BGM—

ஆண் : வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா…
ஹா… வாள் எடுத்தால் தூள் பறக்கும்…
பெண் : சேதி சொல்லவா…

ஆண் : நம்ம முகம் பாத்துக்கோ…
சிம்மக் குரல் கேட்டுக்கோ…
இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ…

ஆண் : இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்…
பெண் : உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்…

ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : ஹேய்… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : ஹா… அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி…
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி…

ஆண் : ஹே ஹேய்… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : ஹேய்… அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க…

—BGM—


Notes : Nattukulla Namma Pathi Song Lyrics in Tamil. This Song from Viduthalai (1986). Song Lyrics penned by Pulamaipithan. நாட்டுக்குள்ள நம்மை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading