நட்ட நடு கடல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநாகூர் இ.எம்.ஹனிஃபா & மனோஇளையராஜாசெம்பருத்தி

Natta Nadu Kadal Song Lyrics in Tamil


ஆண் : கடலிலே தனிமையில் போனாலும்…
கண்மணி உன் நினைவில் களைப்பாருவேன்…
அலைகளில் தத்தளித்தாலும்…
அவள் நினைவில் முக்குளிப்பேனே…
அடியே அமுதே இதுவே போதும்…

—BGM—

ஆண் : நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…

ஆண் : நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…

ஆண் : எட்டி எட்டிப் போனாலும்…
கெட்டு மனம் போகாது…
அற்புதமே அன்னக்கிளியே…

ஆண் : பிரிந்தது உயிரல்ல உடல்தான்…
விட்டு விலகாது உயிர் காதலே…
கரையிலே கன்னி துடித்தாளே…
கட்டு மரம் மீதில் காளை தவித்தானே…
இதுதான் காதலில் இடைவேளை…

—BGM—

ஆண் : வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்…
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்…

ஆண் : சுத்தி வரும் புயலென்ன…
கொட்டுகின்ற இடியென்ன…
அன்பு விளக்கென்றும் எரியும்…

ஆண் : தெய்வத்திற்கு திரையென்ன…
காதலுக்கு மறைவென்ன…
உங்களுக்கு என்று புரியும்…

ஆண் : ஆற்றிலே இக்கரையில் நின்று…
அக்கரைக்கு தூது விடக் கூடலாம்…
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்…
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்…
அடியே அமுதே வருந்தாதே…

—BGM—

ஆண் : விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்…
கட்டு மரம் கடலாடி கரையேறும் நேரம்…

ஆண் : உப்பெடுக்கும் நேரம் ஒன்று…
முத்தெடுக்கும் நேரம் இன்று…
சித்திரமே செப்புக் குடமே…

ஆண் : கட்டும் உண்டு காவலும் உண்டு…
நம்மை என்ன செய்யும் இன்று…
நித்திலமே முத்துரதமே…

ஆண் : நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…

ஆண் : நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…

ஆண் : எட்டி எட்டிப் போனாலும்…
கெட்டு மனம் போகாது…
அற்புதமே அன்னக்கிளியே…


Notes : Natta Nadu Kadal Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. நட்ட நடு கடல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading