நன்றி உனக்குச் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஉத்தம ராசா

Nandri Unakku Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே…
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே…
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே…
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே…
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே… ஹேய்…
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே…

குழு : நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே…
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே…
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே…
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே…

—BGM—

ஆண் : அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே…
நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே…
குழு : உமையவளே…

ஆண் : மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி…
உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி…
குழு : நிகழுமடி…

ஆண் : நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே…
பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே…
கோடானு கோடியிலே நானும் உன் சேயே…
கைப்பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே…

குழு : வேப்பிலையில் ஆடை கட்டி வீற்றிருக்கும் அம்பிகையே
முக்கோணத்தில் உக்காந்திடும் மகமாயி…

ஆண் : நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே…
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே…
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே…
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே…

—BGM—

ஆண் : படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும்…
கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும் நிழல் கொடுக்கும்…
குழு : நிழல் கொடுக்கும்…

ஆண் : அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும்…
உந்தன் அடியை பணிந்தே வணங்கி உலகிருக்கும்…
குழு : உலகிருக்கும்…

ஆண் : பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி…
அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி…
கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி…
கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி…

குழு : காலம் வந்தால் கண் திறப்பாய்…
தீயவரை நீ எரிப்பாய்…
ஆங்காரியே ஓங்காரியே மாகாளி…

ஆண் : நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே…
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே…
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே…
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே…
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே…
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே…

குழு : நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே…
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே…
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே…
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே…

Notes : Nandri Unakku Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. நன்றி உனக்குச் சொல்ல பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading