இந்த மாமனோட மனசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉத்தம ராசா

Intha Mamanoda Manasu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…

பெண் : குத்தால குளுமையும் கூடி வருது…
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது…
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…

பெண் : மாமனோட… ஹே… மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…

—BGM—

ஆண் : அக்காளின் மகளுக்கு…
கேட்டதை நான் கொடுப்பேன்…
மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற…
ஆசைய நான் முடிப்பேன்…

பெண் : விரும்பியது இந்நேரம் கிடைகிற போது…
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது…

ஆண் : எல்லோர்க்கும் நினைத்தது போலே…
மண வாழ்க்கை வாய்த்திடாது…

பெண் : எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்…

ஆண் : இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்…

பெண் : கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட…

பெண் : மாமனோட…

ஆண் : இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…

ஆண் : குத்தால குளுமையும் கூடி வருது…
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது…
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…

ஆண் : மாமனோட…
இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…

—BGM—

பெண் : பொன்னான நகைகளும்…
மாலையும் போட்டிருப்பேன்…
மணவறையில் கண்ணாலே உனக்கொரு…
நன்றியை நானுரைபேன்…

ஆண் : எனக்கு அன்று சொல்லாத…
உணர்வுகள் கூடும்…
விழி ஓரம் ஈரமாகும்…

பெண் : கல்யாண கனவுகள் யாவும்…
கையில் சேரும் நேரம் ஆகும்…

ஆண் : பல்லாண்டு படித்திடும்…
ஊர் முழுதும்…

பெண் : வண்டாட்டம் பறந்திடும்…
வஞ்சி மனதும்…

ஆண் : மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட…

ஆண் : மாமனோட…

பெண் : ஹே… மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…

ஆண் : இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…

பெண் : குத்தால குளுமையும் கூடி வருது…
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது…
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…

பெண் : மாமனோட…
இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…


Notes : Intha Mamanoda Manasu Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. இந்த மாமனோட மனசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading