இந்த மின்மினிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாசிகப்பு ரோஜாக்கள்

Indha Minminikku Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது…
அடி கண்ணே அழகுப் பெண்ணே…

ஆண் : காதல் ராஜாங்கப் பறவை…
தேடும் ஆனந்த உறவை…
சொர்க்கம் என் கையிலே…

பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது…
என் மன்னா அழகு கண்ணா…

ஆண் : காதல் ராஜாங்கப் பறவை…
தேடும் ஆனந்த உறவை…
சொர்க்கம் என்கையிலே…

பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது…

—BGM—

பெண் : இந்த மங்கை இவள் இன்ப கங்கை…
எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல்…

ஆண் : இந்த கடல் பல கங்கை நதி…
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்…

பெண் : என்னுடல் உனக்கென்றும் சமர்ப்‌பணம்…
ஆண் : நநநன்னா அடி என்னடி உனக்கின்று அவசரம்…

—BGM—

ஆண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது…
அடி கண்ணே அழகுப் பெண்ணே…

—BGM—

பெண் : காதல் ராஜாங்கப் பறவை…
தேடும் ஆனந்த உறவை…
சொர்க்கம் என் கையிலே…

ஆண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது…

—BGM—

ஆண் : தோட்டத்திலே பல பூக்கள் உண்டு…
நீதானே என் சிகப்பு ரோஜா…

பெண் : இன்றும் என்றும் என்னை உன்னுடனே…
நான் தந்தேன் என் ஆசை ராஜா…

ஆண் : மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்…
பெண் : நனனனனா இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன்…

—BGM—

பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது…
என் மன்னா அழகு கண்ணா…

ஆண் : காதல் ராஜாங்கப் பறவை…
தேடும் ஆனந்த உறவை…
சொர்க்கம் என்கையிலே…

பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது…

—BGM—

Notes : Indha Minminikku Song Lyrics in Tamil. This Song from Sigappu Rojakkal (1978). Song Lyrics penned by Kannadasan. இந்த மின்மினிக்கு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading