நண்பனை பார்த்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைபென்னி டயல்விஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Nanbanai Partha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நண்பனை பார்த்த தேதி மட்டும்…
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்…
என் உயிர் வாழும் காலம் எல்லாம்…
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்…

ஆண் : உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்… ஓஹோ…
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்…
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்… ஓஹோ…
தாரே நனனனன ஓஹோ… நானா நா னா நானா…

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்…
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்…
என் உயிர் வாழும் காலம் எல்லாம்…
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்…

BGM

ஆண் : சிறகு இல்லை வானம் இல்லை…
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்…
இளமை இது ஒருமுறைதான்…
துளி மிச்சமில்லாமல் ருசிப்போம்…

குழு : கவலை இல்லை கவனம் இல்லை…
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்…
எரிமலையோ பெரும் மழையோ…
எங்கள் நெஞ்சை நிமித்திதான நடப்போம்…

குழு : வரும் காலம் நமதாகும்…
வரலாறு படைப்போம்…
உறங்காமல் அதற்காக உழைப்போம்… ஓஹோ…
தாரே நனனனன ஓஹோ… நானா நா னா நானா…

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்…
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்…
என் உயிர் வாழும் காலம் எல்லாம்…
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்…

BGM

ஆண் : வித விதமாய் கனவுகளை…
தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்…
பயமறியா பருவம் இது…
நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்…

குழு : சுமைகள் என்று ஏதும் இல்லை…
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்…
பெண்கள் என்றும் ஆண்கள் என்றும்…
உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்…

குழு : மழை தூவும் வெயில் நேரம்…
அதை போலே மனது…
மலர்போலே தடுமாறும் வயது… ஓஹோ…
தாரே நனனனன ஓஹோ… நானா நா னா நானா

ஆண் : நண்பனை பார்த்த தேதி மட்டும்…
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்…
என் உயிர் வாழும் காலம் எல்லாம்…
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்…

ஆண் : உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்… ஓஹோ…
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்…
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்… ஓஹோ…
தாரே நனனனன ஓஹோ… நானா நா னா நானா…


Notes : Nanbanai Partha Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Annamalai. நண்பனை பார்த்த பாடல் வரிகள்.


Scroll to Top