காசேதான் கடவுளப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எஸ்.எம்.சுப்பையா நாயுடுசக்கரம்

Kasethan Kadavulappa Song Lyrics in Tamil


ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…

BGM

ஆண் : காசேதான் கடவுளப்பா…
கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…

ஆண் : கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…
கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…

ஆண் : நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டுபோகும்போது சொல்வதுண்டோ…
நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டுபோகும்போது சொல்வதுண்டோ…

ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…

BGM

ஆண் : தாயை தவிர தந்தையை தவிர…
காசால் எதையும் வாங்கிடலாம்…
தாயை தவிர தந்தையை தவிர…
காசால் எதையும் வாங்கிடலாம்…

ஆண் : தலையா பூவா போட்டுப் பாா்த்து…
தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்…

BGM

ஆண் : கல்லறை கூட சில்லறை இருந்தால்…
வாய் திறந்தே மொழி பேசுமடா…
கல்லறை கூட சில்லறை இருந்தால்…
வாய் திறந்தே மொழி பேசுமடா…

ஆண் : இல்லாதவா் சொல் சபை ஏறாமல்…
ஏழனமாக போகுமடா…

ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…

BGM

ஆண் : அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்…
அவனும் திருடனும் ஒன்றாகும்…
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்…
அவனும் திருடனும் ஒன்றாகும்…

ஆண் : வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்…
அவனும் குருடனும் ஒன்றாகும்…

ஆண் : களவுக்கு போகும் பொருளை எடுத்து…
வறுமைக்கு தந்தால் தருமமடா…
களவுக்கு போகும் பொருளை எடுத்து…
வறுமைக்கு தந்தால் தருமமடா…

ஆண் : பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு…
பூட்டி வைத்தால் அது கருமமடா…

ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…

BGM

ஆண் : கொடுத்தவன் முழிப்பான்…
எடுத்தவன் முடிப்பான்…
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே…

BGM

ஆண் : கொடுத்தவன் முழிப்பான்…
எடுத்தவன் முடிப்பான்…
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே…

ஆண் : சிரித்தவன் அழுவதும்…
அழுதவன் சிரிப்பதும்…
பணத்தால் வந்த நிலைதானே…

BGM

ஆண் : சிரித்தவன் அழுவதும்…
அழுதவன் சிரிப்பதும்…
பணத்தால் வந்த நிலைதானே…

ஆண் : கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்…
கூட்டமிருக்கும் உன்னோடு…
தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம்…
தாளங்கள் போடும் பின்னோடு…

BGM

ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…

ஆண் : நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டு போகும்போது சொல்வதுண்டோ…
நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டு போகும்போது சொல்வதுண்டோ…

BGM


Notes : Kasethan Kadavulappa Song Lyrics in Tamil. This Song from Chakkaram (1968). Song Lyrics penned by Vaali. காசேதான் கடவுளப்பா பாடல் வரிகள்.


Scroll to Top