எங்கேயும் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Engeyum Kaadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல்வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…

—BGM—

ஆண் : கடற்கரையில் அதன் மணல் வெளியில்…
அக்காற்றோடு காற்றாக…
பலகுரல்கள் பல பல விரல்கள்…
தமை பதிவு செய்திருக்கும்…

ஆண் : விடியலிலும் நடு இரவினிலும்…
இது ஓயாதே ஓயாதே…
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்…
மிக கலந்து காத்திருக்கும்…

ஆண் : ஓ… பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்…
உள்ளம் தாங்காதே தாங்காதே…
கண்கள்தான் பின்பு தூங்காதே…

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

—BGM—

ஆண் : அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்…
யார் சொன்னாலும் கேட்காதே…
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்…
இது புரண்டு தீர்த்திடுமே…

ஆண் : முகங்களையோ உடல் நிறங்களையோ…
இது பார்க்காதே பார்க்காதே…
இரு உடலில் ஓர் உயிர் இருக்க…
அது முயன்று பார்த்திடுமே…

ஆண் : யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்…
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்…
பூசென்றாய் பூமி திண்டாடும்…

ஆண் : எங்கேயும் காதல்…
பெண் : விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
ஆண் : வெண்காலை சாரல்…
பெண் : முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பெண் : பரவசம் தந்து பாதத்தில் ஓட…
ஆண் : முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…


Notes : Engeyum Kaadhal Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Thamarai. எங்கேயும் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading