நல்முத்து மணியோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எஸ்.கே.ராஜாமணிகே. வீரமணிசோமு & கஜாஐயப்பன் பாடல்கள்

Nalmuthu Maniyodu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…

—BGM—

ஆண் : ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை…
அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை…
அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை…
பம்பையில் பாலனின் பவள‌மணி மாலை…

—BGM—

ஆண் : ஐந்து மலைவாசனின் அழகுமணி மாலை…
ஐயப்ப‌ சுவாமியின் அருள் கொஞ்சும் மாலை…
ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை…
கன்னியின் கழுத்தினில் அரங்கேறும் மாலை…

—BGM—

ஆண் : முத்தோடும் மணியோடும் முழங்கிடும் மாலை…
முக்கண்ணன் மகனான‌ மணிகண்டன் மாலை…
கழுத்தோடு உறவாடும் காந்தமலை மாலை…
காண‌வரும் பக்தர்க்கு காட்சிதரும் மாலை…

ஆண் : நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…
துளசி மாலை… துளசி மாலை…

—BGM—


Notes : Nalmuthu Maniyodu Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by S. K. Rajamani. நல்முத்து மணியோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading