நளினா நளினா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்மது பாலகிருஷ்ணன் & மஞ்சரிசாஜன் மாதவ்அரணம்

Nalinaa Nalinaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…

பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…

ஆண் : வனப்பினில் வார்த்த வளனா…
இமை தூரிகை ஈர்த்த வதனா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சடுதியில் சாய்க்கும் சலனா…
இள மார்பிடை மேவும் சயனா…

ஆண் : அழகினில் நிதனா…
பெண் : பழகியல் நிபுணா…

ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…

பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…

BGM

ஆண் : இடம் வலம் எங்கும்…
வலம் வரும் என் விரல்…
தொடுமிடம் இனித்திடும் மதுனா…

பெண் : அனல் என மஞ்சம்…
கனல் எழ பெண்ணுடல்…
உயிர்வரை தடமிடும் மதனா…

ஆண் : மதுரம் வழியும் அதரம் பகிரும் இதனா…
பெண் : பருவம் பொழியும் விரகம் பருகும் நியனா…

ஆண் : இடை நகில் ஆடும்…
உடை முகில் மூடும்…
தடை விலகும் நேரம்…

ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…

பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…

BGM

பெண் : இசைந்திட கொஞ்சம்…
இழுத்தெனை கொஞ்சிடும்…
குழைவினில் பதமிடும் பதனா…

ஆண் : வளைவுகள் கெஞ்சும்…
வளைகையில் மிஞ்சிடும்…
கலைதனில் கனிந்திடும் கவினா…

பெண் : துகிலம் விளக்கம் விரதம் அருளும் திறனா…
ஆண் : துரிதம் நிகழும் விகிதம் மலரும் வியனா…

பெண் : உடல் கடல் தாண்டி…
உயிர் பயிர் தீண்டி…
சுகம் திரளும் தருணம்…

ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…

பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…

ஆண் : வனப்பினில் வார்த்த வளனா…
இமைத் தூரிகை ஈர்த்த வதனா…

பெண் : சடுதியில் சாய்க்கும் சலனா…
இள மார்பிடை மேவும் சயனா…

ஆண் : அழகினில் நிதனா…
பெண் : பழகியல் நிபுணா…

ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…

பெண் : நகுனா நகுனா…
நாகையித்ழ் கோர்க்கும் நடனா…


Notes : Nalinaa Nalinaa Song Lyrics in Tamil. This Song from Aranam (2024). Song Lyrics penned by Piriyan. நளினா நளினா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading