நேற்று அவள் இருந்தாள்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் பிரகாஷ் & சின்மயிஏ. ஆர். ரகுமான்மரியான்

Naetru Aval Irundhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
பெண் : ஹேய்… மரியான் வா…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
பெண் : இருந்தேன்…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…
பெண் : ஹா… ஆஅ…

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது…
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது…
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது…

BGM

பெண் : ஹா ஆஆ… நேற்று எந்தன் மூச்சினில்…
உன் காதல் அல்லால் காற்று இல்லையே…
நேற்று எந்தன் மூச்சினில்…
உன் காதல் அல்லால் காற்று இல்லையே…

ஆண் : நேற்று எந்தன் ஏட்டில்…
சோகம் என்னும் சொல் இல்லை இல்லை…

பெண் : நேற்று எந்தன் கை வளையல்…
இசைத்ததெல்லாம் உன் இசையே…

ஆண் : வானே நீ இன்று…
அந்த நேற்றுவரை கொண்டு வா…

பெண் : நேற்று நீ இருந்தாய்…
உன்னோடு நானும் இருந்தேன்…
ஆண் : இருந்தாய்… இருந்தோம்…

பெண் : நேற்று நீ இருந்தாய்…
உன்னோடு நானும் இருந்தேன்…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
ஆண் & பெண் : அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…

பெண் : அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது…
கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது…
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது…


Notes : Naetru Aval Irundhal Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by Vaali. நேற்று அவள் இருந்தாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading