நதியா நதியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஆர்.டி. பர்மன்பூமழை பொழியுது

Nadiya Nadiya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நான் இல்லையா…

பெண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நீயில்லையா…

—BGM—

ஆண் : ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார்…
நீ புன்னகை புரிகையிலே…
தேன் மழைதான் கண்ணில் வழியுது பார்…
நீ தரிசனம் தருகையிலே…

பெண் : மழை தூரலிலும் பனி சாரலிலும்…
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன…
கண்படவும் நீ கை தொடவும்…
அந்த குளிர் விட்டு போவதென்ன…

ஆண் : ராத்திரியில் நம் ராஜ்யத்தில்…
ஓர் நீரோடை பாய்வதென்ன…

பெண் : அதுதான் அதுதான் உனக்கும் எனக்கும்…
கொண்டாட்டம் கும்மாளம்…

ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
பெண் : இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
ஆண் : கொண்டாட நான் இல்லையா…

—BGM—

பெண் : ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து…
நீ இரவினில் படிப்பதற்கு…
ஏங்குதையா சிறு தாமரை பூ…
நீ தேனள்ளி குடிப்பதற்கு…

ஆண் : சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து…
மழை காலத்தில் படுப்பதற்கு…
பாலிருக்கு மலை பழமிருக்கு…
கொண்ட பசியினை தணிப்பதற்கு…

பெண் : கால் தொடங்கி மலர் கூந்தல் வரை…
உன் கை வண்ணம் கண்டாலென்ன…

ஆண் : மெதுவா மெதுவா வரவா வரவா…
ஒண்ணோடு ஒண்ணாக…

பெண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நீயில்லையா…

ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நான் இல்லையா…

—BGM—


Notes : Nadiya Nadiya Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. நதியா நதியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading