நச்சென்று இச்சொன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & உஜ்ஜயினிபரத்வாஜ்அட்டகாசம்

Nachendru Inchendru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நச்சென்று இச்சொன்று தந்தாயே…
இன்னும் ஒன்று…

ஆண் : பச்சென்று இச்சொன்று தந்தாயே…
இன்னும் ரெண்டு…

பெண் : அது போதுமா…
பசி தீருமா…
இனி காமம் வந்து கத்தி வீசுமா…

ஆண் : அடி ஒத்தை ஒத்தை யுத்தம்…
செய்வோமா… செய்வோமா…

பெண் : நச்சென்று இச்சொன்று தந்தாயே…
இன்னும் ஒன்று…

—BGM—

ஆண் : செல்ல முத்தம் போடுகையில்…
சின்ன சின்ன மின்சாரம்…
தோன்றும் என்பார் பெண்ணே…
சொல் தோன்றியதுண்டா கண்ணே…

பெண் : முத்தம் சிந்தும் வேளையிலே…
மூளை குள்ளே விளக்கெரியும்…
ஆமாம் என்றது பெண்மை…
மின்சாரம் உள்ளது உண்மை…

ஆண் : தப்பு தப்பாய் முத்தம் தந்தேன்…
அன்பே உனக்கு…
தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும்…
வாய்ப்பை வழங்கு…

பெண் : தப்போடு என்னென்ன சுகம் ஐயா…
தப்பாமல் தப்பை நீ செய்வாயா… ஆஆ…

—BGM—

பெண் : நனனனன நனனனன நனனனன…

—BGM—

ஆண் : ஆசை பட்ட வெள்ளாடே…
மீசை புல்லை மேயாதே…
மேலும் மேலும் பசியா…
என் மீசையில் என்ன ருசியா…

பெண் : குறும்பு செய்யும் பின் லேடா…
கோபுரத்தை இடிக்காதே…
கழகம் செய்வது சரியா…
நீ கட்டில் காட்டு புலியா…

ஆண் : கியரை கொஞ்சம் மாற்றி போட்டால்…
கார்கள் பறக்கும்…
இதழும் இதழும் மாற்றி போட்டால்…
ஜீவன் தெறிக்கும்…

பெண் : கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே…
என்னை நீ காட்டாறா செய்யாதே…

—BGM—

ஆண் : பச்சென்று இச்சொன்று தந்தாயே…
இன்னும் ரெண்டு…

பெண் : அது போதுமா…
ஹாஹா… பசி தீருமா…
ஹான்… இனி காமம் வந்து கத்தி வீசுமா…

ஆண் : அடி ஒத்தை ஒத்தை யுத்தம்…
செய்வோமா… செய்வோமா…

பெண் : ம்ம்ஹ்ம் ம்ம்ஹ்ம்… ஹாஹா…
இன்னும் ஒன்று…

—BGM—


Notes : Nachendru Inchendru Song Lyrics in Tamil. This Song from Attagasam (2004). Song Lyrics penned by Vairamuthu. நச்சென்று இச்சொன்று தந்தாயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading