மைனா மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷான்டி. இமான்மைனா

Mynaa Mynaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத…
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத…

ஆண் : என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது…
சரியா சரியா…
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது…
முறையா முறையா…
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா…

ஆண் : மைனா… மைனா… ஏலே…

—BGM—

ஆண் : சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல…
சித்திரைக்கு உச்சி வெயில் போல…
நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக…

ஆண் : சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச…
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச…
அடியே நீ மணலத் திரிச்ச கயிறா…
கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா…

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…

—BGM—

ஆண் : கட்டவண்டி செல்லும் வழி தேட…
உண்டிவில்லு ஜல்லிக்கல்ல தேட…
நானோ உன்னத் தேடி அலைஞ்சேனே மனம் வாடி…

ஆண் : பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்…
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்…
துணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர…
கனவா நீ கலைஞ்சா நினைப்பேன் தீர…

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத…
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத…

ஆண் : என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது…
சரியா சரியா…
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது…
முறையா முறையா…
அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா…

ஆண் : மைனா… மைனா…


Notes : Mynaa Mynaa Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. மைனா மைனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading