ஒரு நாளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபுதுப்பேட்டை

Oru Naalil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே…
எங்கும் ஓடி போகாது…
மறு நாளும் வந்துவிட்டால்…
துன்பம் தேயும் தொடராது…

ஆண் : எத்தனை கோடி கண்ணீர்…
மண் மீது விழுந்திருக்கும்…
அத்தனை கண்ட பின்பும்…
பூமி இங்கு பூ பூக்கும்…

ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு…
ஹோ ஹோ ஹோவ்…
ஒரு வாசல் தேடியே விளையாட்டு…
ஹோ ஹோ ஹோவ்…
கண் திறந்து பார்த்தால் பல கூத்து…
ஹோ ஹோ ஹோவ்…
கண் மூடிக்கொண்டால்…

—BGM—

ஆண் : போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்…
வந்தவை போனவை வருத்தம் இல்லை…
காட்டினிலே வாழ்கின்றோம்…
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை…

ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே…
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்…
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே…
உனக்கு துணை என்று விளங்கிவிடும்…

ஆண் : தீயோடு போகும் வரையில்…
தீராது இந்த தனிமை…
கரை வரும் நேரம் பார்த்து…
கப்பலில் காத்திருப்போம்…
எரிமலை வந்தால் கூட…
ஏறி நின்று போர் தொடுப்போம்…

ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
அந்த கடவுளை கண்டால்…

—BGM—

ஆண் : அது உனக்கு இது எனக்கு…
இதயங்கள் போடும் தனி கணக்கு…
அவள் எனக்கு இவள் உனக்கு…
உடல்களும் போடும் புதிர் கணக்கு…

ஆண் : உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை…
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்…
நல்லவன் யார் அட கெட்டவன் யார்…
கடைசியில் அவனே முடிவு செய்வான்…

ஆண் : பழிபோடும் உலகம் இங்கே…
பலியான உயிர்கள் எங்கே…
உலகத்தின் ஓரம் நின்று…
அத்தனையும் பார்த்திருப்போம்…
நடப்பவை நாடகமென்று…
நாமும் சேர்த்து நடித்திருப்போம்…

ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஹோ ஹோவ்…
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்…
ஹோ ஹோ ஹோவ்…
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்…
ஹோ ஹோ ஹோவ்…
மறுபிறவி வேண்டுமா…

—BGM—


Notes : Oru Naalil Song Lyrics in Tamil. This Song from Pudhupettai (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு நாளில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading